வேதமும் ஈஸ்டரும்

by : Eddy Joel Silsbee

உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

தங்களுக்கு பிள்ளை பாக்கியம் வேண்டும் என்று ரோம ஜனங்கள் வணங்கும் ஒரு விக்கிரக தெய்வம் இஷ்டார். மேலும் ஜெர்மானியர் வணங்கின இஷ்தோர் (முயல் & ஆந்தையை சுமக்கும் ஒரு விக்கிரகம்) என்ற தெய்வமும் இந்த கதையில் அடங்கும். வாழ்வு மற்றும் புத்திர பாக்கியம் செழிக்கும் என்ற தவறான நம்பிக்கையில் வருடந்தோரும் கொண்டாடின ஜனங்கள் கத்தோலிக்கத்திற்குள் வந்தபோது அவர்களை தக்கவைக்க இப்பண்டிகைகளை லாவகமாக கிறிஸ்து உயிர்த்த நாளாக்கினர். இரத்தின சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். ஈஸ்டர் தினத்தில் முட்டை கொடுக்கப்படுவதும் வாழ்த்து அட்டையில் முயல் இருப்பதும் ஏன் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் !!

கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே ஒரு முறைமை – வாரந்தோறும் கிறிஸ்துவின் மரணத்தை நினைவுக் கூறவேண்டும் என்பது. அந்த ஒரே ஒரு கட்டளையைக்கூட கடைபிடிக்க முடியாமல், கட்டுக்கதைகளையும் புராணங்களையும் விக்கிரகங்களையும் போதனை என்று நம்பி கிறிஸ்தவன் என்று நம்பிக்கொண்டு டூப்ளிகேட் கிறிஸ்தவனாகிவிடக்கூடாது.

*ஈஸ்டர் பண்டிகையையோ கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் என்று வருடத்திற்கு ஒரு முறையில் கொண்டாடுங்கள் என்று அப்போஸ்தலர்கள் அல்லது கிறிஸ்து நமக்கு கட்டளையிடவும் இல்லை. அவர்கள் கொண்டாடவும் இல்லை. அப்படி ஒரு ஆதாரம் வேதத்தில் இல்லை*. 

கிறிஸ்துவின் மரணத்தை நினைவுக்கூறும்படி:

மாதம் ஒரு முறையல்ல,

திருமண நாளில் அல்ல,

விசேஷ பண்டிகையில் அல்ல,

வாரத்தின் முதல் நாளில் நினைவுகூர்ந்தார்கள் !! அப். 20:7

கொரோனாவை காரணமாக்கி கர்த்தருடைய பந்தியையே காலவரையின்றி தள்ளிப்போட்டு கொடுக்காமலும் எடுக்காமலும் பலர் தவறிழைத்தது நினைவில் இருக்கும். 1கொரி. 11:23-26

தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும், விவாகம் செய்யாதிருக்கவும் ஜனங்களுக்கு *பொய்யர்* கட்டளையடுவார்கள் என்று 1தீமோ. 4:2-3ல் சொன்ன காலத்தில் நாம் இருக்கிறோம். லெந்து நாட்கள் என்று கடந்த 40 நாட்கள் தங்கள் வாயையும் வயிற்றையும் கட்டிப்போட்ட அத்தனை ஜனங்களும் உங்கள் வேதாகமத்தை எடுத்து இந்த வசனங்களை வாசித்துப் பார்க்கவும். இன்றாகிலும் நீங்கள் நம்பிக்கொண்டிருப்பது தவறு என்பதை உணர்ந்து உண்மைக்கு திரும்பலாமே!

*கிறிஸ்து உயிர்த்தெழுந்தது உண்மை தானே? அதனால் ஈஸ்டர் கொண்டாடினால் என்ன தவறு?* என்று நீங்கள் கேட்கலாம்.

1-அமாவாசையை அடிப்படையாக வைத்து ஈஸ்டர் குறிக்கப்படுகிறது.

2-விக்கிரகங்களின் பண்டிகை தான் ஈஸ்டராக மாற்றப்பட்டுள்ளது.

3-கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது பேதுரு நெருப்பூட்டி குளிர்காய்ந்துக்கொண்டிருந்தார் என்றால் தற்காலிக ஈஸ்டர் நாட்களில் எருசலேம் நகரமே வெப்பத்தால் நிறைந்திருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

4-எந்தப் பண்டிகைகளையுமே தேவன் வெறுக்கிறார் என்கிறது வேதம்.

5-கிறிஸ்தவர்கள் வாரத்தின் முதல் நாளில் கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூறுவதை தவிர வேறு எந்த கட்டளையும் வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை.

ஆகவே சொல்லப்படாத எதையும் கடைபிடித்தல் நமக்கு சாபத்தையே கொண்டுவரும். வெளி. 22:18-19, 1கொரி. 4:6, உபா. 29:29.

சாம்பல் புதன், புனித வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர், கிறிஸ்துமஸ் என்ற அத்தனையும் மனிதர்களின் பாரம்பரியங்களே. சுயதிருப்திக்காக இவைகளை கடைபிடித்தல் என்பது சுய ஆத்துமாவையே பரலோகத்திலிருந்து வெளியேற்றிவிடும் !!

மனுஷருடைய கற்பனைகளையும் பாரம்பரியங்களையும் கடைபிடித்து தேவனுடைய சமூகத்தில் வருவது *பாவம்* என்று கிறிஸ்து சொல்கிறார். மத். 15:8-9

வருடம் முழுக்க கூடுகை பக்கமே தலை வைத்துக் கூட படுக்காத அநேகர் இந்த நாளில் தொழுகைக்கு வருவார்கள். அவர்களை மேலும் பாவத்திற்குள்ளாக்காமல் சத்தியத்தை சரியாய் சொல்வது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமை!

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் – கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் – கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JDfVxazP3KYEsGbNA0zhBJ

இப்பதிவின் YouTube லிங்க்:

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com ஆதாரம் : https://historyforatheists.com/2017/04/easter-ishtar-eostre-and-eggs/