#1006 *பேதுரு மல்குஸின் வலதுகாதற வெட்டினார் என்று வாசிக்கிறோம். அப்படியானால் பேதுரு இடது கை பழக்கம் உள்ளவராக இருக்கலாமோ

#1006 *பேதுரு மல்குஸின் வலதுகாதற வெட்டினார் என்று வாசிக்கிறோம். அப்படியானால் பேதுரு இடது கை பழக்கம் உள்ளவராக இருக்கலாமோ என்று நினைக்க தோன்றுகிறது. மேலும், வலது கண் இடலறாயிருந்தால்… வலது கை இடறலாயிருந்தால்… என்றும் உன்னை வலது கண்ணத்தில் அறைந்தால்…என்றும், பிதாவின் வலது பாரிசத்தில்…என்றும் இயேசு வலது என்கிற சொல்லை பயன்படுத்தி இருப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு வேறு ஏதாவது வேதாகம பிண்ணனி இருந்தால் விளக்கம் தாருங்களேன்*

*பதில்* : கெத்சமனே தோட்டத்தில் அன்று இரவு நடந்த அந்த சூழ்நிலையை சொந்த நினைவில் கற்பனை செய்து பாருங்கள்..

தான் நேசிக்கும் தலைவரை பிடிக்க வருகிறார்கள். (யோ. 18:3-5).

மரித்தவரை உயிரோடு எழுப்ப வல்லவர் தனது ஆண்டவர் இயேசு (யோ. 12:17).

குஷ்டரோகியை சுகப்படுத்த வல்லவர் தனது ஆண்டவர் இயேசு (லூக். 7:22).

மோசேயும் எலியாவும் தனது ஆண்டவரிடம் வந்து பேசினதை கண்டவர் பேதுரு. (மாற்கு 9:4-5).

சற்று முன்னர் தான், உள்ளதை விற்று ஒரு பட்டயத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என்று ஆண்டவரே சொல்லியிருந்தார்…(லூக்கா 22:36).

எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டையாய் அதீதமாய் செயலில் இறங்கும் தன்மையுள்ள கடின உழைப்பாளனான படகில் தண்டுவலித்து ஆழ்கடலில் மீன் பிடித்து மெருகேற்றின பேதுரு இத்தனை எண்ணங்களையும் கொண்டிருக்க; தனது பட்டயத்தை எடுத்து காதை மாத்திரம் வெட்டும் அளவிற்கு குறி பார்த்து அளவாய் அளந்து தோள்பட்டையில் பட்டுவிடாமல் அறுக்க முயற்சித்திருப்பாரா?

வேகமாக பட்டயத்தை வீசியிருக்கமாட்டாரோ? அது தோள்பட்டையில் பட்டிருக்காதோ??

எனது அனுமானம் – அவர் அவனுடைய தலையையே குறிபார்த்திருப்பார்… தேவனோ அதை விலக்கி காதோடு நிறுத்தியிருக்கவேண்டும்… !!!

இடது கை பழக்கம் அல்லது வலது கை பழக்கம் கொண்டவர் என எந்த வித்தியாசத்தையும் விநோத அர்த்தங்களையும் விநியோகிக்க இதனிமித்தம் இடமில்லை எனலாம்.

மேலும் மத். 5:29-30ம் வசனத்தில் காணும் ”உன் *வலது கண்* உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். உன் *வலதுகை* உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்” என்ற பதங்களில் *ஏன் வலது* என்ற பக்கத்திற்கு அதிகம் கவனம் இருக்கிறது என்ற கேள்வியை சிந்தித்தால்: வலது என்பது மனிதனின் பார்வையில்: சரியானது, பலமுள்ளது, நீதியுள்ளது, வலிமைவாய்ந்தது, நேர்மையானது, ஆசீர்வதிக்க தகுதியானது என்ற எண்ணம் உண்டு. ஆதி. 48:13, 14, 18,

வலது கரம் அதிகாரம் இருப்பதாக புரிந்து கொள்கிறது – யாத். 15:6, 12

வலது பக்கம் – ஞானம் இருப்பதாக புரிந்து கொள்கிறது – பிர. 10:2

இயேசு கிறிஸ்துவானவர் – பிதாவின் வலது பாரிசத்தில் இருப்பது – ஆளுமையை குறிக்கிறது – அப். 7:55

இதற்கான ஆங்கில வார்த்தையை உணர்ந்தால் இன்னும் இலகுவாகும் ..

வலது = ரைட் (அதாவது சரியானது)

இடது = லெஃப்ட் (அதாவது சரியானது போக மீந்திருப்பது)

நீதி = *ரைட்*ஷியஸ் (*Right*eous)

மனிதன் தனக்கு எது நீதி என்றும், சரி என்றும், மெஜாரிட்டி என்றும், மேலானது என்றும், அநேகர் பின்பற்றுகிறார்கள் என்றும், பலம் என்றும், நேர்மை என்றும், ஆளுமை என்றும் பாராமல்; தான் பரலோகம் போவதற்கு எதுவும் தடையாய் இல்லாதபடிக்கு அதை எறிந்து போடு என்கிறார்.

நாமோ வலது இடது என்று பாராமல் வேதத்தின் நடைமுறை சத்தியத்தை, கிறிஸ்துவின் போதனையை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க வேண்டும். 1கொரி. 3:19, யோசு. 1:7, நீதி. 4:27, ரோ. 12:9

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் – கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

வேதாகம ஆசிரியர்

தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :

kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :

kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :

https://www.youtube.com/joelsilsbee

*—-*—-*—-*—-*—-*—–*