#1005 – பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு தகப்பனுடையதா அல்லது தாயின் கடமையா என்று வேதாகமத்தின்படி விளக்கவும்

#1005 *பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு தகப்பனுடையதா அல்லது தாயின் கடமையா என்று வேதாகமத்தின்படி விளக்கவும்*

*பதில்* : ஏற்கனவே இதைக் குறித்து பல பதிவுகளினூடே எழுதியிருந்தாலும் தனி பதிலாக இதை எழுதுவது அனைவருக்கும் பிரயோஜமாயிருக்கும்.

கோயில் காளைகள் தெருவில் தான்தோன்றி தனமாக சுற்றிவிட்டு இரவில் வந்து அடைவது போல அப்பாக்களின் பொறுப்பு ஆகிவிட்டது என்று நினைக்கத் தோன்றுகிறது.

பிள்ளை வளர்ப்பும், நிர்வாகமும் அப்பாவினுடையது. குடும்பத்திற்கு தலைவனே பொறுப்பானவன். அப்பாவின் வழிநடத்துதலையும், கட்டளைகளையும் கடத்திசென்று அம்மா நிறைவேற்ற உதவுகிறாள்.

அப்பா வேலைசெய்து சம்பாதித்து வீட்டிற்கு கொடுத்துவிட்டு, அம்மாவிற்கே பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு உள்ளதாக நினைப்பது வேதாகமத்தின்படி தவறு.

அப்பாவே தனது குடும்பத்தின் போதகர் மற்றும் தலைவர். 1 கொரி. 11:3 இல் காணப்படும் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும்.

அப்பா தனது பொறுப்பை செயல்படுத்தாமல் அம்மாவிடம் முழுமையாய் விடுவது தவறு. இதன் விளைவாக, பெரும்பாலான குடும்பங்கள் அந்தந்த சமூகங்களில் கடுமையான பிரச்சினைகள், விளைவுகள் மற்றும் சவால்களுடன் போராடுகிறது.

தகப்பன் தெய்வீக குணத்தை வெளிப்படுத்த வேண்டும். மேலும் அவர் கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.  தேவனுடைய வார்த்தையில், குடும்பத்தில் தலைமைப் பொறுப்பு கணவர் / தந்தைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பழைய ஏற்பாட்டில் தந்தைகள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிப்பார்கள் என்றும் பயிற்றுவிப்பார்கள் என்றும் காண்கிறோம் (உபாகமம் 32:7; யோசுவா 4:21; 24:15; நீதிமொழிகள் 4:1).

தாய்மார்களும் இதில் பங்கெடுக்கிறார்கள். ஆனால் ஆன்மீகத் தலைமை உட்பட குடும்பத் தலைமையின் சுமை அப்பாவின் தோள்களிலேயே சுமத்தப்பட்டது (யோசுவா 24:15). யோசுவா அந்த பங்கை ஒப்புக்கொண்டதை கவனிக்கவும்.

புதிய ஏற்பாட்டிலும் அதை காணமுடிகிறது. குடும்பத் தலைமையின் கடமை கணவனுக்கும் தந்தைக்கும் உரியது என்று அப்போஸ்தலர்கள் கற்பித்தார்கள் (எபேசியர் 5:23-24; 6:4; 1 பேதுரு 3:1-6).

ஒவ்வொரு காலகட்டத்திலும், அப்பாக்கள் தங்கள் குடும்பங்களில் ஆன்மீகத் தலைவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.

நேரடியான சில வசனங்களை கீழே பதிவிடுகிறேன்:

எபே. 6:4 பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.

ஆதி. 18:19 கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

உபா. 6:7 நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி…

1நாளா. 28:9-10 என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார். இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கர்த்தர் உன்னைத் தெரிந்து கொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.

சங். 78:4 பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதியங்களையும் விவரிப்போம்.

நீதி. 22:6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

ஏசா. 38:19 நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.

சங். 78:3-5 அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதியங்களையும் விவரிப்போம். அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.

இப்படி இன்னும் ஏராளமான வசனங்கள் உள்ளது.

அப்படியென்றால் தாய்மார்களின் செல்வாக்கை குடும்பத்தில் மறுப்பதற்காக அல்ல. அவர்களது பங்கும் மிக முக்கியமானது.

தீமோத்தேயுவின் தாயும் பாட்டியும் அவனுடைய வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்தார்கள். 2தீமோ. 1:5; 3:15

சாராம்சமாக; குடும்ப தலைவன் தனது குடும்பத்தை மற்றும் பிள்ளை வளர்ப்பில், தகப்பனுக்கே பொறுப்பு உள்ளது. அவனது கட்டளைகளை தாய் எடுத்து நிறைவேற்ற உதவுகிறார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் – கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*—-*—-*—-*—-*—-*—–*